இலங்கை போக்குவரத்துச் சபை
நடமாடும் பரிசோதகர் பதவிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்த்தல்
சிறந்த, தரமான போக்குவரத்துச் சேவையின் பெருமைக்குரிய பங்குதாரராகுவதற்கு எம்முடன் இணையுங்கள்
இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைமை அலுவலகத்தில் நடமாடும் பரிசோதகர் பிரிவில் வெற்றிடமாக உள்ள நடமாடும் பரிசோதகர் பதவிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் தகைமைகளைக் கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இது பஸ் வண்டிகளின் விதிகளில் சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர் குழுக்களின் கடமைகளைப் பரீட்சிக்கும் பதவியாகும். (முப்படையிலிருந்து சட்டபூர்வமாக சேவையிலிருந்து விலகியவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.)
நிலவும் பதவி வெற்றிடங்கள்
தலைமை அலுவலகத்தின் நடமாடும் பரிசோதகர் பிரிவில் 50 நடமாடும் பரிசோதகர் பதவிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு.
01. நடமாடும் பரிசோதகர் பதவி (ஒப்பந்தம்)
கல்வித் தகைமைகள் மற்றும் ஏனைய தகைமைகள்
I. க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிங்களம் / தமிழ் மற்றும் கணிதம் போன்ற பாடங்கள் உட்பட நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்திகள் சகிதம் 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல்.
II. க.பொ.த. (உ/த) பரீட்சையில் குறைந்தபட்சம் மூன்று (03) பாடங்களில் (சாதாரண பொதுப் பரீட்சை தவிர) சித்தியடைந்திருத்தல்.
III. மூன்றாம்நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் ஆறு (06) மாத காலத்திற்குக் குறையாத கணனி கற்கைநெறியொன்றைக் கற்றிருத்தல்.
IV. 18 – 45 வயதுக்கிடையில் இருத்தல் வேண்டும்.
V. சிறந்த தேகாரோக்கிய நிலையில் இருக்க வேண்டும் மற்றும் இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்.
VI. பதவிக்கு ஒப்படைக்கப்படும் கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவதுடன் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் சேவையாற்றுவதற்குத் தேவையான உடல் மற்றும் உளத் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
VII. முப்படையில் சேவையாற்றியவர் விண்ணப்பிப்பதானால் முப்படையில் நிரந்தர சேவை அல்லது தன்னார்வ சேவையாற்றி கௌரவமான சட்டபூர்வமாக விலகியவராக இருக்க வேண்டும்.
பொது நிபந்தனைகள் மற்றும் வழங்கப்படும் வசதிகள்
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஊழியர்களின் பங்களிப்பு 08% என்பதுடன் தொழில் வழங்குநரால் 12% பங்களிப்புச் செய்யப்படும். ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கு தொழில் வழங்குநரால் 3% பங்களிப்புச் செய்யப்படும்.
மாதாந்த அடிப்படை ஒப்பந்தக் கொடுப்பனவு: ஆரம்ப ஒப்பந்தக் கொடுப்பனவு ரூ. 46,220.00 மற்றும் வாழ்க்கைச் செலவுப் படி ரூ. 17,800.00 உட்பட மேலதிக நேரக் கொடுப்பனவு, பயணச் செலவுகள் மற்றும் நடமாடும் பரிசோதகர்களுக்கு இ.போ.ச.வினால் செலுத்தப்படும் ஏனைய கொடுப்பனவுகள் செலுத்தப்படும். ஆட்சேர்த்துக் கொள்ளப்பட்டதன் பின் முறைமாற்றுக் கடமை அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தப்படுவர்.
ஆட்சேர்ப்பதற்கு நேர்முகத் தேர்வின் பின் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி சித்தியடையும் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக் கற்கைநெறியின் பெறுபேறுகளின் பிரகாரம் குழு வரிசைக்கிரமத்தில் மேற்கொள்ளப்படுவர்.
ஆட்சேர்ப்பின் பின் சேவையாற்றும் இடத்திற்கு செல்வதற்கும் மற்றும் திரும்புவதற்கும் 30 கி.மீ. மீற்றருக்குள் பயண அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
ஆட்சேர்ப்பு தொடர்பான இறுதித் தீர்மானத்தை இ.போ.ச. பணிப்பாளர் சபை தன்னகத்தே கொண்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
மேற்கூறிய பதவிகளுக்காக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் மாதிரிப் படிவத்தின் பிரகாரம் தயாரித்துக்கொண்ட விண்ணப்பப் படிவத்தை:
பிரதான நிறைவேற்று அதிகாரி,
இலங்கை போக்குவரத்துச் சபை,
இல. 200, கிருள வீதி,
நாராஹென்பிட்டி,
கொழும்பு 05.
எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் 2026.09.30ஆம் திகதிக்கு முன் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களைத் தாங்கி வரும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் தாம் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிடுதல் வேண்டும்.
நேர்முகத் தேர்வின் போது பாடசாலை விடுகைப் பத்திரம், மாணவர் பதிவுப் புத்தகம் மற்றும் தாம் சேவையாற்றிய முப்படையில் நிரந்தர சேவையிலிருந்து சட்டபூர்வமாக விலகிய சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மாதிரிப் படிவத்திற்கு அமைவாக அல்லாத மற்றும் முழுமையற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.
Closing Date: 2026.09.30
WhatsApp Channel : Click Here
WhatsApp Group : Click Here
Facebook Page : Click Here
Facebook Group : Click Here
