Commercial Bank Banking Trainee Recruitment 2026 – Apply Online

 



Commercial Bank Banking Trainee Recruitment 2026 – கொமர்ஷல் வங்கியில் வேலைவாய்ப்பு

இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான Commercial Bank of Ceylon PLC நிறுவனத்தில் Banking Trainee (வங்கிப் பயிற்சியாளர்) பதவிக்கான ஆட்சேர்ப்பு 2026 அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கித்துறையில் தங்களுடைய தொழில் வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்பும் இளைஞர் யுவதிகளுக்கு இது ஒரு சிறந்த வேலைவாய்ப்பு வாய்ப்பாகும்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வங்கியினால் வழங்கப்பட்டுள்ள இணையவழி விண்ணப்பப் படிவத்தின் மூலம் 06 நவம்பர் 2026 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும்.

வேலைவாய்ப்பு விபரங்கள்

விபரம்தகவல்
நிறுவனம்Commercial Bank of Ceylon PLC
பதவிBanking Trainee
வேலைவாய்ப்பு வகைதனியார் வங்கி வேலைவாய்ப்பு
வயதெல்லை18 – 24 வயது
விண்ணப்ப முறைOnline
இறுதித் திகதி06.11.2026
நாடுஇலங்கை

கல்வித் தகைமைகள் (Educational Qualifications)

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் கல்வித் தகைமைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

1. இலங்கை G.C.E. சாதாரண தரப் பரீட்சை (O/L)

ஒரே அமர்வில் பின்வரும் பெறுபேறுகளைப் பெற்றிருத்தல் வேண்டும்:

  • கணிதப் பாடம் உட்பட 04 பாடங்களில் C சித்திகள்.

  • ஆங்கிலப் பாடத்தில் A அல்லது B சித்தி.

  • மொத்தமாக 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

2. Edexcel அல்லது Cambridge O/L

ஒரே அமர்வில் பின்வரும் பெறுபேறுகளைப் பெற்றிருக்க வேண்டும்:

  • ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 03 பாடங்களில் B சித்திகள்.

  • மேலும் 03 பாடங்களில் C சித்திகள்.

  • மொத்தமாக 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

3. உயர்தரக் கல்வித் தகைமை (A/L)

மேற்குறிப்பிட்ட O/L தகைமைகளுடன் பின்வரும் தகைமைகளில் ஏதேனும் ஒன்றையும் பெற்றிருக்க வேண்டும்.

  • இலங்கை G.C.E. A/L பரீட்சையில் ஒரே அமர்வில் பிரதான பாடங்களில் (பொது ஆங்கிலம் தவிர்த்து) 03 S சித்திகள்.

அல்லது

  • Edexcel / Cambridge A/L பரீட்சையில் 03 C சித்திகள்.

வயதெல்லை (Age Limit)

விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாதவர்களாகவும் 24 வயதுக்கு மேற்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

Commercial Bank Banking Trainee பதவிக்கான விண்ணப்பங்கள் இணையவழியாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் படிமுறைகள்:

  1. கீழே வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ Online Application இணைப்பிற்குச் செல்லவும்.

  2. கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல்களைச் சரியாகப் பூர்த்தி செய்யவும்.

  3. கல்வித் தகைமைகள் மற்றும் ஏனைய விபரங்களை கவனமாக உள்ளிடவும்.

  4. விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அனைத்து தகவல்களையும் சரிபார்க்கவும்.

  5. இறுதியாக விண்ணப்பத்தை Submit செய்யவும்.

முக்கியம்: தபால் மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது வேறு முறைகளிலோ அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமான அறிவுறுத்தல்

  • விண்ணப்பிக்கும் முன் அனைத்து தகைமைகளையும் சரிபார்க்கவும்.

  • விண்ணப்பத்தில் சரியான தனிப்பட்ட தகவல்களை வழங்கவும்.

  • இறுதித் திகதிக்கு முன்னர் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

  • விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக வாசிக்கவும்.

Online Application – விண்ணப்ப இணைப்பு

Commercial Bank Banking Trainee Recruitment 2026 வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

Online Application: Click here

Official Website:
https://www.combank.lk/

விண்ணப்ப முடிவுத் திகதி: 06 நவம்பர் 2026


Post a Comment

Previous Post Next Post