இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
வெற்றிடங்கள்
இப்பல்கலைக்கழகத்தில் வெற்றிடமாக காணப்படும் கீழ்வரும் பதவிகளுக்கு உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
01) தொழில்நுட்ப அதிகாரி (ஒலியோளி) தரம் III [U-MT 1(III)]
தகைமைகள் :
(i) க.பொ.த. (உ.த.) பரீட்சையில் எதேனும் பிரிவில் ஒரே தடவையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
மற்றும்
(ii) (அ) மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்று அல்லது பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது தொழில்நுட்பக் கல்லூரி/பல்கலைக்கழகத்தில்/பல் ஊடக அல்லது ஆடியோ வீடியோ நுட்பங்கள் ஆகிய துறைகளில் தேசிய தொழிற்பயிற்சி தகைமையின் 5ஆம் (NVQ Level 5) மட்டத்திற்கு குறையாத தகைமையைப் பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
(ஆ) விண்ணப்பதாரர் இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில், இலங்கைத் தகைமைச் சட்டகத்தின் (Sri Lanka Qualifications Framework) 3ஆம் மற்றும் 4ஆம் மட்டங்களைப் பார்த்துச் செய்து பட்டப்படிப்பு தொடர்புடையவராக அல்லது தேசிய தொழிற்பயிற்சி மையத்தில் (NVQ Level 5 & 6) 5ஆம் மற்றும் 6ஆம் மட்டங்களைப் பூர்த்தி செய்து டிப்ளோமா சான்றிதழைப் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
(இ) விண்ணப்பதாரர் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் மின்சாரம், மின்னணுவியல் மற்றும் பல ஊடகம் அல்லது ஒலி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான துறையில் பாடநெறியை நிறைவு செய்திருத்தல் வேண்டும்.
சம்பள அளவுத்திட்டம் : ரூபா. 51,095 – 7 × 540; 10 × 640 – 60,575 (மாதாந்தம்) [U-MT 1(III)]
ஆட்சேர்ப்பு முறை : எழுத்துப்பரீட்சை மற்றும்/அல்லது பிரயோகப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம்.
02) பராமரிப்பாளர் (மின்சாரம்) தரம் III [U-MT 1(III)]
தகைமைகள் :
தொழில்நுட்பம் தொடர்பான தேசிய சான்றிதழ் அல்லது சமமான தகைமையுடன் மூன்று (03) வருட அனுபவத்தைப் பெற்றிருத்தல். (கற்கைநெறியை மேற்கொள்ளும் காலப்பகுதிகள் மேற்படி அனுபவத்தில் உள்ளடக்கப்படமாட்டாது.)
அல்லது
க.பொ.த. (சா.த.) பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாதவாறு ஆறு பாடங்களில் (06) சித்தியடைந்திருத்தல் அல்லது அரச மானியமற்ற தனியார் நிறுவனமொன்றில் அல்லது அரச கூட்டுத்தாபனமொன்றில் தொழில்நுட்பப் பிரிவில் பரிசோதகராக ஐந்து (05) வருட அனுபவத்தைப் பெற்றிருத்தல்.
சம்பள அளவுத்திட்டம் : ரூபா. 51,095 – 7 × 540; 10 × 640 – 60,575 (மாதாந்தம்) [U-MT 1(III)]
ஆட்சேர்ப்பு முறை : நேர்முகப் பரீட்சையின் மூலம்.
03) பொது சுகாதார பரிசோதகர் (தரம் III) [U-MT 1(III)]
தகைமைகள் :
சுகாதாரத் திணைக்களத்தினால் நடத்தப்படும் பொது சுகாதார பரிசோதகர் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல்.
சம்பள அளவுத்திட்டம் : ரூபா. 51,095 – 7 × 540; 10 × 640 – 60,575 (மாதாந்தம்) [U-MT 1(III)]
ஆட்சேர்ப்பு முறை : எழுத்துப்பரீட்சை மற்றும்/அல்லது நேர்முகப் பரீட்சை மூலம்.
04) நூலக தகவல் உதவியாளர் (தரம் III) [U-MN 1(III)]
தகைமைகள் :
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிங்களம் / தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட மொத்தமாக 06 பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒரு அமர்வில் அனைத்து பாடங்களிலும் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். மேலும், பல்கலைக்கழக நூலகப் பாடத்திட்டத்தில் கீழ் ஒரே தடவையில் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் போன்ற தகைமைகள் கொண்டிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
(அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் நூலகம் மற்றும் தகவல் விஞ்ஞானம் தொடர்பாக முழு நேர / பகுதி நேர பயிற்சி அனுபவமுடையவர்களாகவோ, மாணவர்-கல்வி பயிற்சி அனுபவமுடையவர்களாகவோ இருத்தல் வேண்டும்.
மற்றும்
(ஆ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் நூலகம் மற்றும் தகவல் விஞ்ஞானம் தொடர்பான துறையில் தகைமையைப் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பள அளவுத்திட்டம் : ரூபா. 49,475 – 17 × 540 – 58,655 (மாதாந்தம்) [U-MN 1(III)]
ஆட்சேர்ப்பு முறை : எழுத்துப்பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம்.
05) சாரதிகள் தரம் III [U-PL 3(III)]
தகைமைகள் :
க.பொ.த. (சா.த.) பரீட்சையில் குறைந்தபட்சம் இரண்டு (02) சிறமைச் சித்திகளுடன் இரண்டு தடவைகளுக்கு மேற்படாதவாறு ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
கனரக வாகனங்களை ஓட்டுவது தொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளரால் அளிக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றிருப்பதுடன், சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் தொடர்ச்சியாக மூன்று வருட அனுபவத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பள அளவுத்திட்டம் : ரூபா. 48,005 – 16 × 490 – 55,845 (மாதாந்தம்) [U-PL 3(III)]
ஆட்சேர்ப்பு முறை : தொழில்நுட்பப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம்.
APPLICATION - CLICK HERE
WhatsApp Channel : Click Here
WhatsApp Group : Click Here
Facebook Page : Click Here
Facebook Group : Click Here
